மன்னார் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வன்னி மாவட்ட தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்தில் பூர்த்தியாகி உள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும்,மாவட்டச் செயலாளருமான க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வாக்களிப்பு நிலையங்கள்
98 வாக்களிப்பு நிலையங்கள் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் மாவட்டச் செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் பாதுகாப்பு நிலவரங்களை பொருத்தவரையில் காவல்துறையினர்,விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பிற்காக தயார் படுத்தப் பட்டுள்ளனர்.
290 காவல்துறையினர் மற்றும் 77 விசேட அதிரடிப்படையினர் மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தயார் படுத்தப்பட்டுள்ளனர்.
அரச உத்தியோகத்தர்கள்
மன்னார் மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 1603 அரச உத்தியோகத்தர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் மாவட்டத்தில் சிறப்பான தேர்தலை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது 8 வாக்கு என்னும் நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படும்.
நாளைய தினம் (13) வாக்களிப்புகள் நிறைவடைந்த பின்னர் மாவட்டச் செயலகத்தில் உள்ள வாக்கு என்னும் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் மாவட்டச் செயலகத்தில் உள்ள 8 வாக்கு என்னும் நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |