யாழில் வீணையுடனும் மட்டுவில் படகுடனும் களமிறங்கும் பசிலின் தந்திரோபாய நகர்வு!
மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தனது தேர்தல் பிரச்சார கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
இன்று (24) காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த அவர் வழிபாடுகளின் பின்னர் தேர்தல் பிரச்சாரங்களை அறிவித்துள்ளார்.
தனது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆசிர்வாதம் பெறுவதற்காகவே வந்ததாக ஊடக சந்திப்பில் தெரிவித்தார் .
யானையுடன் மொட்டு
மேலும் அங்கு கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ச,
''கேள்வி - இம்முறை யானையுடன் இணைவதற்கு கரணம் என்ன?
பதில் - எல்லா இடங்களிலும் நங்கள் யானையுடன் இனைந்து போட்டியிடவில்லை.பெரும்பாலான இடங்களில் எமது சின்னத்தில் போட்டியிடவுள்ளோம்.
மொத்தம் 340 உள்ளூராட்சி தொகுதிகளில் 252இல் நேரடியாக மொட்டு அடையாளத்துடன் போட்டியிடுகிறோம். குறித்த சில பகுதிகளில் மாத்திரமே கூட்டாக போட்டியிடுகிறோம்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வீணையுடனும், மட்டக்களப்பு பகுதியில் படகு, குதிரை, தேயிலை போன்ற சின்னங்களில் போட்டியிடுகிறோம்.
கேள்வி - மொட்டு மக்கள் மத்தியில் பிரபலமான சின்னம். ஆனால் அவர்களால் மக்கள் மத்தியில் செல்ல முடியாத காரணத்தினால் இவ்வாறு செய்கிறார்களா?
பதில் - இல்லை கடந்த முறை போல நான் அதிக தொகுதிகளை கைப்பற்றவேணும் என்பதே என் ஒரே இலக்கு.
கேள்வி - தேர்தலை ஒத்திவைக்க பல்வேறு யுக்திகள் கையாளப்படுவதாக கூறப்படுகிறது அது தொடர்பில் உங்கள் கருத்து ?
பதில் - அரசாங்கத்திடம் கேளுங்கள்... நான் ஆட்சியில் இல்லை... வேட்புமனு தாக்கல் காலம் வரும் என்று பலர் காத்திருந்தனர்.
கேள்வி - பலர் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். இது ஒரு உங்களுக்கு ஒரு சவாலா? பதில் - அப்படித்தான். இருந்துவிட்டுப் போகிறார்கள்.வெளியேறுகிறார்கள்.நுழைகிறார்கள். அரசியல் அப்படித்தான். சவால்தான். ஆனால் அதை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
கேள்வி - மொட்டுவின் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
பதில் - மக்கள் அதை தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள் அவர்கள் முடிவுகள் நன்மை தரும்.''என தெரிவித்தார்.

