மின்சார கட்டணத்தை செலுத்த தவறிய அமைச்சர் - வெளிவந்த விபரம்
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரின் வீட்டின் மின்சார நிலுவை தொகை, ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாவாக காணப்படுகின்றது என இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்ஜன் ஜயலால் (Ranjan Jayalal) தெரிவித்துள்ளார்.
கிருலபனை - சரணங்கர வீதியிலுள்ள தனது வீட்டிற்கான மின்சார கட்டணத்தை, குறித்த அமைச்சர் செலுத்த தவறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அமைச்சரின் வீட்டிற்கான மின்சாரத்தை துண்டிப்பதற்கு இலங்கை மின்சார சபை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
அத்துடன், மின்சாரத்தை துண்டிக்க முயற்சிக்கும் போது, அந்த வீட்டிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இடையூறு விளைவிக்கின்றனர்.
நாட்டிலுள்ள அப்பாவி மக்களின் வீடுகளில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு முன்பதாக, இவ்வாறான அமைச்சர்களின் வீடுகளில் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்