இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த ஒப்பந்த வரைவு
இலங்கைக்கும் மற்றும் இந்தியாவுக்கும் இடையில் மின்சாரக் கட்டங்களை இணைப்பதற்காக இந்தியாவிடமிருந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவு இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் கையொப்பமிடுவதற்கு எதிர்பார்த்த நிலையில் இலங்கை மின்சார சபை தற்போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை மின்சார இணைப்புத் திட்டத்தை 2030 ஆம் ஆண்டிற்குள் செயற்படுத்துவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekera) உறுதியளித்துள்ளார்.
தொழில்நுட்ப மதிப்பீடு
இந்த திட்டத்தின் தொழில்நுட்ப மதிப்பீட்டிற்காக இலங்கை மின்சார சபையின் குழு ஒன்று இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் மின்சாரக் கட்டத்தை இணைக்க நீரூக்கடியிலான கேபிளைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்திற்கு இரண்டு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |