குறைவடையப்போகும் மின்சார கட்டணம்: உமா ஓயா திட்டத்தால் கிடைக்கவுள்ள நன்மை
மின்சார கட்டணத்தை எதிர்வரும் மே மாதம் கணிசமாக குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக மின்சார இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
உமா ஓயா திட்டத்தின் மூலம் கிடைக்கும் 120 மெகாவோட் இலாபத்தில் இந்த நிவாரணத்தை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு நன்மை கிடைக்காத வகையில் மக்கள் விடுதலை முன்னணி போன்ற குழுக்கள் பொய்யான கருத்துக்களை பரப்பி வருவதாகவும், உமா ஓயாவை திறந்தால் மண்சரிவு ஏற்படும் என கூறுவது அதில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மண்சரிவு
அத்தோடு, உமா ஓயா திட்டத்தில் மண்சரிவு ஏற்படுவது இது வரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், உமா ஓயா பிரதேசத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் விரிசல்கள் மற்றும் நீர்க்கசிவுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நாளை (01) பூகற்பவியலாளர்கள் குழுவொன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |