நாட்டில் மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு
எதிர்வரும் அக்டோபர் - டிசம்பர் மாதத்துக்குள் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் உயர்வடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சார சபை (CEB) தற்போது நட்டத்தில் இயங்குகிறது என்று தெரிவித்து மின் கட்டண உயர்வுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்தவகையில், 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்துள்ளது.
மின்சார சபையின் நிதி செலவுகள்
தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டங்கள் மற்றும் மறுசீரமைப்பு செயல்முறைகளுக்கு மத்தியில் சபை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இந்த காலாண்டில் 783 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது மின்சார சபையின் நிதி செலவுகள் 248 கோடி ரூபாய் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தற்போது மக்கள் கருத்துகளைக் கோரி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
