மின்சாரக் கட்டணக் குறைப்பு: பொருட்களின் விலையில் விரைவில் மாற்றம்!
Sri Lanka
Ceylon Electricity Board
By Harrish
மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு ஏற்ப அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பொருட்களின் விலை குறையும் என்று அகில இலங்கை சிறுதொழில் வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்க பொதுப் பயன்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார குறிப்பிட்டுள்ளார்.
உற்பத்தி பொருட்களின் விலை
அதன்படி, நேற்று (20) முதல், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான மின்சாரச் செலவுகள் குறைந்துள்ளதாகவும், இதன் விளைவாக, பொருட்களின் விலை 5% முதல் 10% வரை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சுமார் இரண்டு வாரங்களில் சந்தைக்கு வழங்கப்படுமென்றும், இதனால் மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி