எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு! அடுத்த திட்டத்தை நோக்கி நகரும் இலங்கை
இலங்கையில் மின்சார முச்சக்கரவண்டிகளின் புதிய நடைமுறை ஆரம்பிக்கபடவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் 300 முச்சக்கரவண்டிகளை மின்மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் நிலவும் பெட்ரோலிய நெருக்கடிக்கு தீர்வாகவே இந்த திட்டம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசேட மாநாடு
இதேவேளை இத்திட்டம் தொடர்பான சட்டப் பின்னணியை தயாரிப்பதற்கான முன்மொழிவுகளை பெற்றுக் கொள்ளும் விசேட மாநாடு எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த முன்னோடித்திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறைகள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

