முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் காட்டு யானைகள் அட்டகாசம்
mullaitivu
farmers
elephant
village
coconut tree
By Vanan
காட்டு யானைகளின் தாக்கத்தினால் 65ற்கும் மேற்பட்ட தென்னம்பிள்ளைகள் அழித்து நாசம் செய்யப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வள்ளிபுனம் கிராமத்திற்குள் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
காய்க்கும் தென்னை மரங்கள் உட்பட 65 ற்கும் மேற்பட்ட தென்னம்பிள்ளைகளையே யானைகள் இவ்வாறு அழித்துள்ளன. தொடர்ச்சியாக கிராமத்திற்குள் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் பல சேதங்கள் இடம்பெறுகின்றன.
தற்போது நெல் அறுவடை முடிந்த நிலையில் காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்து நாசம் செய்து வருகின்றன.
பல தடவைகள் யானை வேலியினை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், தேங்காயின் விலை அதிகரித்துள்ள நிலையில் காட்டு யானைகளினால் தங்களது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதாகவும் கிராமத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்