அதிகாலை இடம்பெற்ற அனர்த்தம் : கால்கள் சிதைந்து அலைந்து திரியும் காட்டு யானை
பொலனறுவ-மட்டக்களப்பு பிரதான தொடருந்து பாதையில் உள்ள வெலிகந்த செவனபிட்டிய பகுதியில், இன்று(29) காலை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த விரைவு தொடருந்து மோதியதில் காட்டு யானை ஒன்று, காலில் காயத்துடன் மெனிக்வெல கிராமத்தைச் சுற்றி அலைந்து கொண்டிருப்பதாக வெலிகந்த வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 2:30 மணியளவில் தொடருந்து மோதிய அந்தக் காட்டு யானை, சுமார் முப்பது வயதுடையதும் எட்டு அடி உயரமுடையதுமான ஒரு ஆண் யானை என்று வெலிகந்த வன அலுவலர் சி.ஏ. வனசிங்க கூறினார்.
யானையின் இரண்டு பின்னங்கால்களும் கடுமையாகச் சேதம்
காட்டு யானையின் இரண்டு பின்னங்கால்களும் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர்.

image- lankadeepa
கிராமத்தின் சாலையிலும் பக்கச் சாலைகளிலும் காட்டு யானை ஆபத்தான நிலையில் சுற்றித் திரிவதாகவும், அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக வனவிலங்குத் திணைக்களத்தைச் சேர்ந்த கிரித்தல வனவிலங்கு கால்நடை மருத்துவர் சமீர கலிகுவாராச்சி உள்ளிட்ட வனவிலங்கு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வனசிங்க தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |