அரசாங்கத்தின் அசண்டை! யானை - மனித மோதல் அதிகரித்துள்ளது - சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர்
நாட்டில் குளங்களை இலக்கு வைத்து நடை பாதைகளை அமைக்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளதாகவும், இந்த பேரழிவு தருணத்தில், தேசிய முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய அவசர விடயமாக அது ஒருபோதும் அமையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக மேற்கொள்ளப்பட வேண்டிய பல முக்கியமான பணிகள் உள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குமண தேசிய பூங்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டம் மற்றும் லெஃபர்ட் திட்டம் மூலம் திரட்டப்பட்ட நிதியைப் பயன்படுத்தி குமண தேசிய பூங்காவில் ஒருங்கிணைந்த அதிகாரபூர்வ குடியிருப்பு தொகுதிகளுக்கு அவசியமான 2இலட்சத்து 40ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான சோலர் ஆஃப் கிரிட் லைட்டிங் சிஸ்டம்(Solar off grid light system) சூரிய ஒளியில் இயங்கும் வெளிப்புற விளக்கினையும் வழங்கி வைத்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பது, வனவிலங்குகளைப் பாதுகாப்பதும் அனைவர் சார்ந்த பொறுப்பாகும்.
வனஜீவராசிகள் துறை தன்னிடம் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு பல வேலைகளைச் செய்ய முயற்சிக்கிறது.
அதிகாரிகள் பெரிய அர்ப்பணிப்பைச் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் அர்ப்பணிப்பை யாரும் பாராட்டுவதில்லை.
இன்று யானை-மனித மோதல் அதிகரித்துள்ளது என்றும், இதுபோன்ற மோதலில் மரணம் ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு பெற செய்ய வேண்டிய தியாகங்கள் மகத்தானவை.
சில சந்தர்ப்பங்களில், இழப்பீட்டுத் தொகையைப் விட அதிக தொகையொன்றை அதைப் பொறுவதற்கான செலவுகளுக்காக விரயமாக்க வேண்டி உள்ள நிலையை அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


