மரமுந்திரிகை தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட கொம்பன் யானை
புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரணவில்லுவ பகுதியில் தனியார் ஒருவரின் கைவிடப்பட்ட மரமுந்திரிகைத் தோட்டத்தில் ஒற்றைக் கொம்பன் யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கொம்பன் யானையொன்று உயிரிழந்துள்ளதாக நேற்று(27)வண்ணாத்திவில்லு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டபோது யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த கொம்பன் யானை கங்கைவாடி பகுதியின் ஒற்றைக் கொம்பன் நெட்டகொட்டா என்று மக்களால் அழைக்கப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காரணம்
உயிரிழந்த கொம்பன் யானையின் சடலத்திற்கு இன்று காலை (28) நிகாவெரெட்டிய மிருக வைத்தியர் இசுரு ஹேவா கொட்டகேவினால் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையின் போது உறுதி செய்யப்பட்டதாக மிருக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த கொம்பன் யானை சுமார் 10 அடி உயரம் எனவும் சுமார் 40 வயது என மதிக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |