பாரிய அளவில் கைப்பற்றப்பட்ட கஜமுத்து!! (படம்)
Sri Lanka Army
Sri Lanka Police
Monaragala
Sri Lanka Police Investigation
By Kanna
அதிரடி படையினர் சுற்றிவளைப்பு
75 கஜமுத்துக்களை வைத்திருந்த 67 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை இக்கினியாகல பிரதேசத்தில் வைத்து நேற்று விசேட அதிரடி படை கைது செய்துள்ளது.
அம்பாறை முகாம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவ்வாறான 75 முத்துக்களை வைத்திருந்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
வரலாற்றில் ஒரு பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான முத்துக்கள் இது என்று அதிரடி படை தெரிவித்துள்ளது.
விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி டிஐஜி வருண ஜயசுந்தரவின் பணிப்புரையின் கீழ் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சந்தேகநபர் இகினியாகல காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்