பொம்மை என நினைத்து பாம்பை கடித்த குழந்தை
பீகாரில் (Bihar) ஒரு வயது குழந்தை பொம்மை என நினைத்து பாம்பை கடித்ததில் பாம்பு இறந்த செய்தி தற்போது வைரலாகி வருகின்றது.
குறித்த சம்பவம் பீகார் மாநிலம் மேற்கு சாம்பரான் மாவட்டத்தின் பங்கட்வா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில், குழந்தை பாட்டியின் கண்காணிப்பில் இருந்துள்ளது.
நாகப்பாம்பு
இதன்போது இரண்டு அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று, குழந்தையின் அருகே ஊர்ந்து வந்துள்ளது.
குழந்தை அதை கண்டுகொள்ளாமல் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், அது குழந்தையின் கையை சுற்ற ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில், பாம்பை பொம்மை என நினைத்த குழந்தை, பாம்பை பிடித்து கடிக்க தொடங்கியுள்ளது.
இரண்டு துண்டு
பாம்பை கடிப்பதை பார்த்த குழந்தையின் பாட்டி, பதறியடித்து கொண்டு வந்து பார்த்த போது, குழந்தை கடித்ததில் பாம்பு இரண்டு துண்டுகளாகி இறந்த நிலையில், குழந்தையும் உடனே மயங்கி விழுந்துள்ளது.
இதையடுத்து குழந்தையை வைத்தியசாலைய கொண்டு சென்ற நிலையில், ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை மேலதிக சிகிச்சைக்காக பெட்டியா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விஷத்தின் பாதிப்பு சிறிய அளவில் உள்ளதால் குழந்தைக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் ஆனால் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் வைத்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
