தேசபந்து மீதான விசாரணை: நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ள அறிக்கை
இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandhu Tennakoon) மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்த குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது.
இதன்படி குறித்த அறிக்கை வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்படவுள்ளது.
அறிக்கை ஒன்று நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பின்னர் அது ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், இந்த அறிக்கை ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்படவுள்ளது.
நீக்குவதற்கான நடைமுறை
இந்தநிலையில் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடைமுறையை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) அண்மையில் கோடிட்டுக் காட்டினார்.
முன்னதாக, தென்னக்கோனின் தவறான நடத்தை குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, தென்னகோனை குற்றவாளி என்று ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.
அதன்படி, விசாரணை அறிக்கை மீதான விவாதம் 2025 ஒகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
