மறைந்த தலைவர் மாவையை நினைவு கூர்ந்த சிறீதரன் எம்.பி

Sri Lanka Politician Sri Lanka ITAK Current Political Scenario
By Shalini Balachandran Jul 27, 2025 06:53 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) போல ஒரு தலைவரை நாங்கள் திரும்ப பெற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ( S. Shritharan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை சங்கானை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மாவை சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவு பகிர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “2001 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியிருந்த ஒற்றுமையை, 2010 இல் இருந்து அதற்கு பின்னர் ஓரளவுக்கு பேணியதில் மாவை சேனாதிராஜாவுக்கு பெரும் பங்கு உண்டு.

மறைந்த மாவை சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வு

மறைந்த மாவை சேனாதிராஜாவின் ஆறாவது மாத நினைவஞ்சலி நிகழ்வு

அரசாங்க அதிபர் 

என்னை அரசியலுக்குள் கொண்டு வந்ததும் அண்ணன் மாவை சேனாதிராஜாவே அந்த நேரம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த இராசநாயகத்தை அரசியலுக்குள் கொண்டு வர முயற்சித்தோம்.

மறைந்த தலைவர் மாவையை நினைவு கூர்ந்த சிறீதரன் எம்.பி | Sixth Month Memorial Service For Mavai Senathiraja

சில காரணங்களுக்காக அவர் விலகியதால் வைத்தியர் சத்தியமூர்த்தி, அரியரட்ணம் மற்றும் தர்மரட்ணம் இப்படி சிலரை அரசியலுக்குள் கொண்டுவர முயற்சித்தும் அது பலனளிக்காமல் போகவே நான் அரசியலுக்குள் வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

மாகாண சபை தேர்தல் காலத்தில் நாங்கள் அவரிடம் பேசுகின்ற போது அவர் எம்மிடம் இனம் முக்கியம், இனத்துக்காக பாடுபட வேண்டும், அதற்காக நாங்கள் எந்த விட்டுக்கொடுப்பும் செய்ய வேண்டும் என்றார்.

யாழில் முன்னாள் பெண் போராளி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழில் முன்னாள் பெண் போராளி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

பாரிய இழப்பு

அவரது இழப்பென்பது தமிழ் மக்களை பொருத்தவரை ஒரு பாரிய இழப்பு, அவர் தமிழ் தேசிய இனத்திற்கு கிடைத்த ஒரு ஒப்பற்ற தலைவர்.

மறைந்த தலைவர் மாவையை நினைவு கூர்ந்த சிறீதரன் எம்.பி | Sixth Month Memorial Service For Mavai Senathiraja

தமிழரசு கட்சியின் செயற்பாடுகளை எல்லா மாவட்டங்களுக்கும் கொண்டு சென்றவர் அண்ணன் மாவை சேனாதிராஜா, நிறைய பேரால் பேசப்பட்டவராகவும் அல்லது விமர்சிக்கப்பட்டவராகவும் அவர் இருந்தார்.

அனைத்தையும் பொறுத்து இனத்துக்காக வாழ்ந்த மிகப்பெரிய ஒரு மனிதர், ஒருமுறை அவர் இறந்து விட்டார் என ஆனையிறவு பகுதியில் இராணுவத்தினர் அவரை தூக்கி வீசி விட்டு சென்றார்கள்.

குருணாகல் - கண்டி வீதியில் கோர விபத்து

குருணாகல் - கண்டி வீதியில் கோர விபத்து

சமநிலை மாற்றம்

அதற்குப் பின்னரும் அவர் உயிருடன் வந்தது என்பது அபூர்வம் அதேபோல அவர் 2001 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக ஊர்காவற்துறை - தம்பாட்டிக்கு சென்ற போது அங்கு வைத்து ஈ.பி.டி.பியினரால் அவரது மண்டை பிளக்கப்பட்டது.

அதற்குப் பின்னர் தான் அவரது உடலில் ஒரு சமநிலை மாற்றம் ஏற்பட்டது, அவரது வாழ்க்கை என்பது ஒரு மிகப்பெரிய சரித்திரம், எமது இனத்தைப் பொறுத்தவரை இனிமேல் இவ்வாறான ஒரு தலைவரை நாங்கள் பெற முடியாது.

மறைந்த தலைவர் மாவையை நினைவு கூர்ந்த சிறீதரன் எம்.பி | Sixth Month Memorial Service For Mavai Senathiraja

இப்படியான ஒரு நல்ல மனிதருக்கு நிறைய மன வருத்தங்களை கொடுத்தவர்கள் பலர், மனோரீதியாக அவரை பாதிப்படையை செய்தவர்கள் பலர் ஆனால் வரலாறு அவர்களுக்கு அந்த தண்டனையை திருப்பி வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

இயற்கையும் வரலாறும் தண்டனையை வழங்கும், அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது, நாங்கள் செய்வது உமக்கு என்பது ஒரு உலக நியதியும் விதியம் கூட, நல்லது செய்தால் நல்லது கிடைக்கும், கெட்டது செய்தால் கெட்டது கிடைக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

எலோன் மஸ்க் தொடர்பாக ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

எலோன் மஸ்க் தொடர்பாக ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016