வளைகுடாவில் ஆபத்தான பதற்ற அதிகரிப்பாக மாறிய LNG கப்பல் தாக்குதல்
வளைகுடாப் பகுதியில் கட்டாரின் திரவ இயற்கை எரிவாயு ஏற்றிச் செல்லும் அல் மயேடா கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது குறித்த ஊடகஅறிக்கையில், ஜிசிசி பொதுச்செயலாளர் ஜாசிம் முகமது அல்-புதைவி, கட்டாரின் எரிவாயு போக்குவரத்து நிறுவனத்தால் இயக்கப்படும் கப்பல் மீதான தாக்குதலை ஒரு ஆபத்தான பதற்ற அதிகரிப்பு என்று விவரித்துள்ளார்.
மேலும், அரேபிய வளைகுடாவின் கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் ஓர் அடித்தளமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிவைக்கப்படும் எரிவாயு டேங்கர்கள்
எரிவாயு டேங்கர்களைக் குறிவைப்பது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைச் சீர்குலைத்து, சந்தைகளை நிலைகுலையச் செய்து, கடல்சார் சூழலைச் சேதப்படுத்தும் என்று அல்-புதைவி எச்சரித்துள்ளார்.

மேலும், இந்த கொடுமையான தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |