எல்ல பகுதியில் கோர விபத்து - வேடிக்கை பார்க்க வர வேண்டாம்: எச்சரிக்கும் காவல்துறை
எல்ல - வெல்லவாய வீதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதிக்கு பொது மக்களை வேடிக்கை பார்க்க வர வேண்டாம் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த கோர விபத்து நேற்று இரவு (4) எல்ல - வெல்லவாய வீதியின் 24 ஆவது மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
வேடிக்கை பார்க்க வர வேண்டாம்
விபத்தில் இறந்தவர்களில் 9 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஐந்து குழந்தைகள் உட்பட பதினொரு ஆண்கள் மற்றும் ஏழு பெண்களும் அடங்குவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பொது மக்களை வேடிக்கை பார்க்க வர வேண்டாம் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
