14வது குழந்தைக்கு தந்தையானார் தொழிலதிபர் எலோன் மஸ்க்
அமெரிக்க(us) தொழிலதிபரும், ஜனாதிபதி ட்ரம்பின் நெருங்கிய நண்பருமான எலோன் மஸ்க்(elon musk), 14வது குழந்தைக்கு தந்தையானதாக நேற்று (01)அறிவித்துள்ளார்.
'எக்ஸ்' சமூக வலைதளம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வருபவர், அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலோன் மஸ்க்,( 53)
எலோன் மஸ்கிற்கும், அவரது முதல் மனைவி ஜஸ்டின் வில்சனுக்கும் 2002ல் ஒரு மகன் பிறந்தான். அதன்பின் இத்தம்பதிக்கு இரு பிரசவத்தில் இரட்டையர்கள் மற்றும் மூவர் என ஐந்து குழந்தைகள் பிறந்தன. 2008ல் எலோன் மஸ்க் - ஜஸ்டின் வில்சன் பிரிந்தனர்.
முதல் இரண்டு மனைவிகள்
அதன்பின், இசையமைப்பாளர் கிரிம்ஸ் என்பவரை மணந்தார், மஸ்க். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அவரையும் பிரிந்த மஸ்க் தற்போது ஷிவான் ஜில்லிஸ் என்ற பெண்ணுடன் வசித்து வருகிறார்.
14வது குழந்தைக்கு மஸ்க் தந்தை
மஸ்க் - ஷிவான் தம்பதிக்கு ஸ்ட்ரைடர், அசூர், அர்காடியா என மூன்று குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நான்காவதாக மகன் பிறந்துள்ளதாகவும், அந்த குழந்தைக்கு ஷெல்டன் லைகர்கஸ் என பெயர் வைத்துள்ளதாகவும், மஸ்கின் மனைவி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டார்.
இதற்கிடையே, பிரபல எழுத்தாளரும், சமூக வலைதள பிரபலமுமான ஆஸ்லே செயின்ட் கிளேர், ஐந்து மாதங்களுக்கு முன் எலோன் மஸ்கின் குழந்தையை பெற்றெடுத்ததாக அறிவித்தார். இதை எலோன் மஸ்க் மறுக்கவில்லை. அதன்படி தற்போது 14வது குழந்தைக்கு மஸ்க் தந்தையாகி உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 4 நாட்கள் முன்
