சம்பளம் குறித்து அதிரடி கோரிக்கையை முன் வைத்த மஸ்க்
டெஸ்லா நிறுவனரும் உலகின் முதல் பணக்காரருமான எலான் மஸ்க், தனக்கு ஒரு டிரில்லியன் டொலர் சம்பளம் வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பில் டெஸ்லாவின் வருடாந்திரக் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.
எலான் மஸ்க்கின் அரசியல் கருத்துகளால் டெஸ்லா விற்பனை சரிவில் செல்லும் நிலையில் அவர் சம்பளத்தை உயர்த்திக் கேட்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்றத் தாழ்வு
அத்தோடு, உலகளவிலான செல்வ ஏற்றத் தாழ்வுகளை சுட்டிக்காட்டியும் எலான் மஸ்க்கின் சம்பள உயர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்தநிலையில், சம்பள உயர்வு இல்லையெனில் டெஸ்லாவை விட்டு விலகி விடுவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிக பங்குகள்
இது தொடர்பில் எலான் மஸ்க் கருத்து தெரிவிக்கையில், சம்பள உயர்வானது பணத்துக்காக அல்ல, டெஸ்லாவின் எதிர்கால ரோபோ இராணுவத்தைக் கட்டுப்படுத்த வேறு யாரையும் என்னால் நம்ப முடியாது.

அதனால்தான், நிறுவனத்தின் மீதான கட்டுப்பாட்டைப் பெற அதிக பங்குகள் வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |