மீண்டும் முதலிடத்தை தனதாக்கிய எலோன் மஸ்க் - தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!
United States of America
Elon Musk
By Pakirathan
உலகப் பணக்காரர்களின் பட்டியலில் மீண்டும் முதலாவது இடத்தை எலோன் மஸ்க் கைப்பற்றியுள்ளார்.
ப்ளூம்பெர்க் (Bloomberg) நிறுவனத்தின் அண்மைய மதிப்பீட்டில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் கடந்த ஆண்டு டிசம்பரில் முதலிடத்தை இழந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார்.
மாஸ்க் மீண்டும் உலகப் பெரும் பணக்காரர்
இதனால் பிரான்ஸ் சொகுசுப் பொருள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பெர்னார்ட் ஆர்னால்ட் உலகப்பணக்காரர்களின் பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்தார்.
இந்தநிலையில், நேற்று டெஸ்லா நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்து, மஸ்க் மீண்டும் உலகப் பெரும் பணக்காரர் ஆனார்.
அந்தவகையில், தற்போது எலோன் மஸ்க் இன் சொத்து மதிப்பு 187. 1 பில்லியன் டொலராகவும், ஆர்னால்ட்டின் சொத்து மதிப்பு 185.3 பில்லியன் ஆகவும் உள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி