துபாய் - கொழும்பு விமானங்களில் புதுப்பிக்கப்பட்ட சேவையை வழங்க தயாராகும் எமிரேட்ஸ் நிறுவனம்
உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், ஜூலை 18 முதல் துபாய் மற்றும் கொழும்பு இடையேயான EK650/651 விமானங்களில் புதுப்பிக்கப்பட்ட நான்கு வகுப்பு போயிங் 777 விமானங்களை இணைக்க தீர்மானித்துள்ளது.
புதிதாக புதுப்பிக்கப்பட்ட இந்த விமானம் , இலங்கை விமான நிறுவனத்தின் இரண்டாவது தினசரி விமானமாக இருக்கும் என்றும், இது வணிக வகுப்பு இருக்கை வசதியைக் கொண்டிருக்கும் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது, எமிரேட்ஸ் அதன் விரிவான வலையமைப்புகளில் 40க்கும் மேற்பட்ட இடங்களுக்கு உயர் மதிப்பு சேவையை வழங்குகிறது.
உயர் மதிப்பு சேவை
உயர் மதிப்பு சேவையை வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலிருந்து வரும் பயணிகள் மற்றும் கொழும்புக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுபவர்கள் தங்கள் முழு பயணத்தையும் முன்பதிவு செய்து, வழியில் ஆறுதல் மற்றும் உயர்தர சேவை அனுபவத்தை பெறலாம் என எமிரேட்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
குறித்த எமிரேட்ஸ் விமானம் EK650 துபாயில் இருந்து 02:40 மணிக்குப் புறப்பட்டு 08:35 மணிக்கு கொழும்பு வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், மீள்திரும்பும் விமானம் EK651 கொழும்பில் இருந்து 10:05 மணிக்குப் புறப்பட்டு 12:55 மணிக்கு டுபாயை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

