நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதால் பயனில்லை: ஆளும் தரப்பு திட்டவட்டம்
srilanka
power
SB Dissanayake
executive
By S P Thas
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசதலைவர் முறைமையை நீக்குவதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் படும் இன்னல்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் வருந்துவதாக கூறிய அவர், மக்களின் குறைகளை உணர்ந்து அரசாங்கம் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பாக எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி