அரச சேவையை நாடும் மக்களுக்கு வெளியான நற்செய்தி!
நாட்டில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு சிறப்பு மொழிபெயர்ப்பாளர் குழு ஒன்றை உருவாக்க நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது, பிரதேசங்களுக்கு ஏற்ப மொழிகள் மாறுவதால், அரசு நிறுவனங்களில் இருந்து சேவைகளைப் பெறவரும் மக்கள் சிரமப்படுவதை தவிர்ப்பதற்காவே இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரச சேவை
அதன்படி, தற்போது அரச சேவையில் பணிபுரியும், நாட்டின் முக்கிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களின் அடிப்படையில் இந்த குழு தயாரிக்கப்பட்டு புதியவர்கள் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொது சேவையில் தற்போதுள்ள வெற்றிடங்களில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகங்களில் காணப்படுவதாக அரச தரப்பு அறிவித்துள்ளது.
இதன்படி, சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகங்களில் 3,519 வெற்றிடங்கள் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa ) தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)