காசா போருக்கு முற்றுப்புள்ளி ! இஸ்ரேலுக்கு அழுத்தம் அளிக்க ட்ரம்புக்கு அழைப்பு
காசாவில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
முன்னாள் உளவுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட, ஓய்வுபெற்ற சுமார் 600 இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு குறித்த கடிதத்தை எழுதியுள்ளனர்.
குறித்த கடிதத்தில்,
மூலோபாய அச்சுறுத்தல்
"ஹமாஸ் இனி இஸ்ரேலுக்கு ஒரு மூலோபாய அச்சுறுத்தலாக இல்லை என்பது எங்கள் தொழில்முறை முடிவு.
பெரும்பாலான இஸ்ரேலியர்களிடம் உங்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மை, பிரதமர் நெதன்யாகுவையும் அவரது அரசாங்கத்தையும் சரியான திசையில் வழிநடத்தும் உங்கள் திறனை அதிகரிக்கிறது.
இதன்படி போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள், பணயக்கைதிகளைத் திருப்பி அனுப்புங்கள், துன்பத்தை நிறுத்துங்கள்
மேலும், ஹமாஸுடனான மறைமுக போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளது” என கூறியுள்ளது.
இதற்கமைய காசாவில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த நெதன்யாகு அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
