ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் எரிசக்தி அமைச்சர் முன்வைத்த கோரிக்கை!!
நாட்டில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவி வருவதால், டீசலை பதுக்கிவைக்கவோ, தேவையான அளவுக்கு மேல் கொள்வனவு செய்யாமலோ இருக்குமாறு பொதுமக்களிடம் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய அவர்,
"மின் உற்பத்திக்கு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. போதுமான பெட்ரோல் 92 ஒக்டோன் மற்றும் சூப்பர் டீசல் பங்குகள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் 95 ஒக்டோன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் என்பவற்றின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டுக்கு நாளொன்றுக்கு 4000 மெட்ரிக் தொன் டீசல் தேவைப்படுகிறது ஆனால் தற்போது ஒரு நாளொன்றுக்கு1000 - 1500 மெட்ரிக் தொன் டீசல் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.
போதுமான ஒக்டென் 92 பெட்ரோல் மற்றும் சூப்பர் டீசல் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.எனினும், ஒக்டேன் 95 பெட்ரோலுக்கு மாத்திரம் சிறியளவு தட்டுப்பாடு நிலவுகிறது.
ஒட்டோ டீசல் வரையறையுடன் விநியோகிக்கப்படுகிறது. மசகு எண்ணெய் மற்றும் ஒக்டேன் 95 பெட்ரோல் துறைமுகத்தில் தரையிறக்க தயார் நிலையில் காத்திருகிறது.
அடுத்த டீசல் இறக்குமதி மே 11 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனினும், அது 2 நாட்கள் தாமதமாகக்கூடும்.
இருப்பினும், நாட்டில் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை போதியளவு கையிருப்பு எம்மிடம் உள்ளது", எனக் குறிப்பிட்டார்.

