பாலியல் குற்றச்சாட்டில் கைதான பாடசாலை ஆசிரியர்
மாத்தறை (Matara) - தெவிநுவர பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஆசிரியர் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் பாடசாலை ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட சிறுமியுடன் நெருக்கமாகப் பணியாற்றியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் மற்றும் சிறுமியிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக மாத்தறை வலய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.
தற்போது, சிறுமியை மருத்துவ பரிசோதனைகளுக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் செயற்பாடுகளுக்காக வற்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
