தமிழரசுக் கட்சியின் தோல்விக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம் : சாடும் சிவமோகன்
வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்வியடைந்தமைக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம் எனவும் அவர் அரசியலை நாகரிகமாக செய்யவில்லை எனவும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிவமோகன் (S. Sivamohan) தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் (Vavuniya) அவரது அலுவலகத்தில் நேற்று (12.05) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”சட்டத்தரணிகளால் வழக்கு போடப்பட்டு தான் தமிழரசுக் கட்சி சின்னாபின்னமாகியுள்ளது.
தமிழரசுக் கட்சியின் செயற்பாடே காரணம்
குடத்தனையில் சுமந்திரன் (M. A. Sumanthiran) தான் வாக்களித்து விட்டதாக கை காட்டுவதைப் பார்த்தேன். முன்னாள் வடமாகாண சபை உறுப்பனர் சுகிர்தனுக்கும் அது தான் வட்டாரம். இருவரும் இருந்தும் கூட அந்த வட்டாரத்தில் அவர்களால் வெல்ல முடியவில்லை.
அதேபோல் வவுனியாவில் கடந்த முறை 8 ஆசனங்களை நங்கள் மாநகரசபையில் பெற்றிருந்தோம். இந்த முறை ஒன்று கூட இல்லாமல் போயுள்ளது.
தமிழரசுக் கட்சியின் செயற்பாடே அதற்கு காரணம். சத்தியலிங்கத்தின் செயற்பாடு அதற்கு காரணமாக அமைந்தது.அரசியலை நாகரிகமாக அவர் செய்யவில்லை. அதனால் மக்கள் சரியான பாடத்தை கொடுத்துள்ளார்கள்.
உங்களது தொகுதிகளில் தோற்று விட்டு ஏனைய தொகுதிகைளை வைத்து நாம் வென்று விட்டோம் என மார்தட்ட வேண்டாம்.
தமிழ் தேசியத்துடன் பயணித்தவர்கள்
அதேபோல் மட்டக்களப்பில் கோட்டைகல்லாறு தோற்கடிகப்பட்டுள்ளது. புளியந்தீவு தோல்வி, குலநாயகத்தின் வல்வெட்டித்துறை ஒட்டுமொத்த தொகுதியும் தோல்வி. முல்லைத்தீவு நகரம் ரவிகரன், பீற்றர் இளஞ்செழியன் சேர்ந்து வேலை செய்தார்கள் தோல்வி.
ரவிகரன் நெடுக நடந்து திரியும் கொக்கிளாய் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள உறுப்பினர் வென்றுள்ளார். சிறீதரன் (S.Shritharan) ஒட்டுமொத்தமாக வென்றுள்ளார்.
மண்முனை சிறீநேசனின் (G. Sirinesan) வட்டாம் 10 இல் 8 ஐ வென்றுள்ளார். நேரடியாக ஆட்சியமைக்க கூடியதாகவுள்ளது. புதுக்குடியிருப்பு எனது தொகுதி அங்கு 12 இல் 11 வென்றுள்ளோம். அந்த 11 பேரும் நான் இருக்கும் போது தெரிவு செய்யப்பட்டவர்கள்.
நல்ல வேளை அவர்களை மாற்றவில்லை. ஒருவரை என்னுடைய வட்டாரத்தில் மாற்றி போட்டார்கள். அவர் தோல்வி. வெற்றிக்கு காரணமானவர்கள் தமிழ் தேசியத்துடன் பயணித்தவர்கள். மற்றவர்களுக்கு நல்ல விடயத்தை மக்கள் சொல்லியுள்ளார்கள். இதன் பின்னாவது அவர்கள் திருந்தி நடக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
