அதிர வைக்கும் தொடர் கொலைகள்: ஊடகவியாளாலர் சமுதித்தவுக்கு பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
இலங்கையின் பிரபல ஊடகவியாளாலர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு(Chamuditha Samarawickrama) காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஊடகவியாளாலர் சமுதித்த நேர்காணல் செய்த நான்கு பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உயிருக்கு அதிகரித்த அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சமுதித சமரவிக்ரம நேர்காணல் செய்த நான்கு பேர் சமீப காலங்களில் மர்மமான சூழ்நிலையில் கொல்லப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு கோரிக்கை
மித்தேனியாவில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி, தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு சமுதித்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நீதிபதிகள், குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சமுதித சமரவிக்ரம போன்ற ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
