டக்ளஸ் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்த மின்சார சபை

CEB Jaffna Douglas Devananda
By Vanan Nov 13, 2022 12:31 PM GMT
Report

மின் கட்டணம் செலுத்தப்படாமையினால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் சிறிதர் தியட்டர் கட்டிடத்தில் இயங்கி வருகின்ற ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகம் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தகவல்களை வெளியிட்ட பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவர்,   2014 ஆண்டுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் நிலைப்பாடு

டக்ளஸ் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்த மின்சார சபை | Epdp Party Office Cut Off Electricity Jaffna

மேலும், அரசாங்கத்தில் மிக முக்கியமான சிரேஷ்ட அமைச்சராகவும், தற்போதைய அரசாங்கத்தினை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவருமாக விளங்கி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அதிகாரம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றை இதுவரை பயன்படுத்தாது இருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக குறித்த மின்சார சபை ஊழியர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சுன்னாகத்தில் இயங்கும் தேசியக் கட்சியைச் சேர்ந்த எம்.பி ஒருவருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மின் இணைப்பை மின்சார சபை ஊழியர்கள் துண்டித்த போது, தமது அரசியல் செல்வாக்கை பயன்படுத்திய குறித்த பிரமுகர், ஒரு மணி நேர இடைவெளியில் மின் இணைப்பை மீண்டும் பெற்றுக்கொண்டமை, தொடர்பில் பத்திரிகைகளில் கூட செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான நிலையில் தற்பொழுது செல்வாக்கு மிகுந்த நபராகவுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். அலுவலக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஈ.பி.டி.பி வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரியவருவதாவது,

ஈ.பி.டி.பியின்  நிலைப்பாடு

டக்ளஸ் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்த மின்சார சபை | Epdp Party Office Cut Off Electricity Jaffna

1990 இல் இருந்து 1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணம் இராணுவத்தினரால் விடுவிக்கும் வரை சிறிதர் அரங்கு விடுதலைப் புலிகள் திரையரங்காக செயற்பட்டிருந்ததுடன் விடுதலைப் புலிகளின் பாவனையில் இருந்துள்ளது.

பின்னர் படையினரின் பாவனையில் இருந்த நிலையிலேயே ஈபிடிபியினரினால் பொறுபேற்கப்பட்டு அலுவலகம் அமைக்கப்பட்டது.

அப்போதைய யுத்த சூழ்நிலை காரணமாக பாதுகாப்பின் நிமிர்த்தம் சுற்றிவர மின்சாரம் வழங்கப்பட்டு நாகவிகாரை உட்பட அயலில் உள்ளவர்களுக்கும் இங்கிருந்தே மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு பின்னர் மின்சாரப் பாவனை மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும், மின்மாணி வாசிப்பு அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்ட நிலையில், 2014 ஆண்டு புதிய மின் மாணி பொருத்தப்பட்டிருக்கிறது.

அதன் பின்னர் மின் கட்டணம் சீராக செலுத்தப்பட்டு வருகின்ற போதிலும், 2014 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட நிலைவைத் தொகை மற்றும் அதற்கான அபராதத் தொகை போன்றவையே தற்போது மின் துண்டிக்கப்பட்டமைக்கு காரணம் என்றும் தெரிய வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017