ஊழியர்களின் வைப்பு நிதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்: நிதியமைச்சர் வழங்கிய நம்பிக்கை
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ் ஊழியர்களின் வைப்பு நிதிகளுக்கு பாதகமான பாதிப்புகள் ஏற்படாது என்பது நடைமுறை ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மொத்த கடன் தொகை சுமார் 83 பில்லியன் டொலர்களாகும். இதில் வெளிநாட்டு கடன் தொகை சுமார் 41 பில்லியன் டொலராகும்.
ஊழியர் நம்பிக்கை நிதிய உறுப்பினர்
அதனை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 42 பில்லியன் டொலர் உள்நாட்டு கடனை மறுசீரமைப்பது குறித்தும் சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் சுமார் 26 இலட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளதாகவும், சுமார் ஒரு லட்சம் பேர் அதன் பயனாளிகளாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 12 மணி நேரம் முன்