சுமந்திரன் மற்றும் சாணக்கியனை சந்தித்த எரிக் சொல்ஹெய்ம்..!
நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மீட்சி
'நாடாளுமன்ற உறுப்பினர்களும் பழைய நண்பர்களுமான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருடன் கொழும்பில் சந்தித்து உரையாடியிருந்தேன்.' என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், பொருளாதார மீட்சி, பசுமையான அபிவிருத்திகள் மற்றும் அரசியல் சீர்திருத்தம் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Very good meeting in Colombo with two old friends - leading Tamil parliamentarians Sumanthiran and Shanakiyan. Exciting discussion on the way forward for Sri Lanka ?? - economic recovery, green developments and political reform. pic.twitter.com/BqAz2yFxDa
— Erik Solheim (@ErikSolheim) October 13, 2022
