வெனிசுலாவுக்கு உதவக் களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றியம்...!
வெனிசுலாவின் மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்கைக்கோள் கண்காணிப்பு அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐரோப்பிய ஒன்றியம் இதனைத் தெரிவித்துள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் தங்களின் முதன்மையான செயற்கைக்கோள் அடிப்படையிலான புவி கண்காணிப்பு அமைப்பான கோப்பர்நிக்கஸ் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது.
அடுத்தகட்ட உதவி
இது குறித்துச் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி ஆணையர் ஹட்ஜா லஹ்பிப் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த இவர், “கோப்பர்நிக்கஸ் கண்காணிப்பு அமைப்பு தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளதுடன் வெனிசுலாவிற்கான அடுத்தகட்ட உதவிகளை விரிவுபடுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்காளிகள் ஏற்கனவே வெனிசுலாவில் களமிறங்கித் தரைமட்ட அளவிலான மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கத் தொடங்கிவிட்டனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 8 மணி நேரம் முன்