ஈரானின் முக்கிய இராணுவ கட்டமைப்புக்கு பேரிடி!
ஈரானில் போராட்டங்களை அடக்கும்போது 6,373 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் புரட்சிகர காவல் படையை (IRGC) தீவிரவாத அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகியுள்ளது.
அதன்படி, இந்த முடிவுக்கு 27 உறுப்புநாடுகளின் ஒருமித்த ஆதரவு தேவைப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட இராஜதந்திரி காஜா காலாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை நோக்கம்
இந்த நிலையில், ஈரானின் புரட்சிகர காவல் படையானது, அல்கொய்தா, ஐஎஸ், ஹமாஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களை அடக்குமுறை செய்தால் அதற்கான விலை செலுத்த வேண்டியிருக்கும் என்பதே இந்த நடவடிக்கையின் தெளிவான செய்தி என காலாஸ் கூறியுள்ளார்.
பிரான்ஸின் எதிர்ப்பு
எவ்வாறாயினும், குறித்த தீர்மானத்திற்கு முன்னர் பிரான்ஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தற்போது ஈரானுக்கு எதிரான கூடுதல் தடைகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Image Credit: Reuters
1979ல் நிறுவப்பட்ட ஈரான் புரட்சிகர காவல் படை, ஈரானின் சக்திவாய்ந்த இராணுவ அமைப்பாகவும் அரசியல், பொருளாதார கட்டமைப்பின் முக்கிய தூணாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |