பனிப்பொழிவு மற்றும் கடும் குளிரால் முடக்கப்பட்ட ஐரோப்பா
ஐரோப்பாவில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக பிரித்தானியா பிரான்ஸ் நெதர்லாந்து உட்பட்ட பல நாடுகளில் நெருக்கடிகள் எழுந்துள்ளன.
நேற்றும் இன்றும் ஐரோப்பிய நாடுகளில் நூற்றுக்கணக்கான விமான சேவைகளும் தொடருந்து மற்றும் போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட பரிஸ் நகரில் சுமார் ஆயிரம் கிலோமீற்றருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வடக்கு ஐரோப்பிய நாடுகள்
இந்த வாரத்தின் ஆரம்பம் முதலே வடக்கு ஐரோப்பிய நாடுகளின் பெரும்பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்தில் நேற்று புறப்பட அல்லது தரையிறங்க திட்டமிடப்பட்ட விமானங்களில் 400 சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

வடமேற்கு பிரான்ஸின் பெரும்பகுதிகளில் ஏற்பட்ட பனிப்பொழிவால் சார்லஸ் டி கோல் மற்றும் ஓர்லி விமான நிலையங்களும் பாதிப்படைந்துள்ளன.
பிரான்ஸ் தலைநகரில் நேற்று 1,000 கி.மீ வரையான போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர், பரிஸின் வீதிகளில் நேற்று வேகக் கட்டுப்பாட்டு தொடர்பில் விதிமுறைகளை உத்தரவிட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வீதிப்போக்குவரத்து சேவை
பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் காரணமாக ஐரோப்பா முழுவதும் தொடருந்து மற்றும் வீதிப்போக்குவரத்து சேவைகளும் பாதிப்படைந்துள்ளன.

லண்டன் - பரிஸ் மார்ககத்தில் சில யூரோஸ்டார் தொடந்து சேவைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இன்று காலை, லண்டனில் இருந்து பரிஸுக்குச் செல்லும் சேவைகள் தாமதங்களைச் சந்தித்துள்ளன.
அதே நேரத்தில் லண்டனில் இருந்து பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் நகரங்களுக்கான தொடருந்து சேவைகளும் மீளெடுபட்டுள்ளன.
பிரித்தானியாவில் பனி பொழிவு காரணமாக நூற்றுக்கணக்கான பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து பிராந்தியங்களில் போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |