செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினர்!
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் பார்வையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஜுலை மாத முற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குறித்த பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செம்மணி மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 24 ஆவது நாள் அகழ்வுப்பணிகள் நேற்று (14) நடைபெற்றன.
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி
இதன்போது 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 02 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்தார்.

அதன்படி இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 355 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், அவற்றில் 341 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில, கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்வரும் ஜுலை மாத முற்பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைச் சென்று பார்வையிடுவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
இதேவேளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இவ்வாரம் அல்லது எதிர்வரும் வாரம் செம்மணி மனிதப்புதைகுழிவைப் பார்வையிடச் செல்வார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |