சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய அரசியல் சாசனத்தில் நம்பிக்கையில்லை - சம்பந்தன் பகிரங்கம்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள இரா. சம்பந்தனின் வீட்டில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.
அரசாங்கத்தின் புதிய அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லை

இந்த சந்திப்பின் போது, புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளமை நம்பகரமான விடயம் அல்லவென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதனால் சர்வதேச சமுகம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The #EU Delegation met with @TNAmediaoffice leader @R_Sampanthan and self and held extensive discussions on #Human_Rights #Economic_Recovery #GSP_Plus #Repeal_PTA #Elections to Provincial Councils and Local Authorities and other related issues. pic.twitter.com/ef0yR6bea9
— M A Sumanthiran (@MASumanthiran) October 27, 2022
மேலும் மனித உரிமைகள், பொருளாதார மீட்பு, GSP+ வரிச்சலுகை , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் பிற தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.