விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால்........! - ஹர்சன ஆவேசம்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் கூட இவ்வாறு செய்திருக்க மாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இந்த அரசாங்கத்தை பதவி விலகுமாறு மாகாநாயக்கர்கள் உட்பட அனைவரும் கோரிக்கை விடுக்கின்ற நிலையில் அரச தலைவரும், பிரதமரும் காது கேளாதது போலவும், கண் தெரியாதது போலவும் நடந்து கொள்கின்றனர்.
வீதிகளில் நிலையான வீதித்தடைகளை பொருத்தியுள்ளனர். சில வீதித்தடைகளை முட்கம்பிகள் கொண்டு உருவாக்கியுள்ளன்ர். இதனால் மக்களுக்கு பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கலாம். முட்கம்பி ஏதேனும் கண்களில் பட்டு இருந்தால் காலம் முழுவதும் பார்வையற்றவராகும் நிலை ஏற்படலாம்.
இப்படியான கொடூரமான சம்பவங்கள் தொடர்பில் மனித உரிமைகள் தொடர்பான இயக்கங்கள் தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தன. எனினும் கருத்துக்களை தெரிவிப்பது மாத்திரம் போதாது.
இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.
நாங்கள் ஒரு கட்சியாக அதற்கான நடவடிக்கையை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
இந்த நாட்டின் தலைவராக பிரபாகரன் இருந்திருந்தால் அவர் கூட இப்படி செய்திருப்பார் என நான் நினைக்கவில்லை.
சிலர் தெரிவித்தார்கள் ஹிட்லர் போன்ற ஒரு தலைவர் தேவையென, அப்படியாயின் ஹிட்லர் போன்ற தலைவராகவா முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
"Even Prabhakaran will not oppress the people like this" - Harshana Rajakaruna.
— DailyMirror (@Dailymirror_SL) April 25, 2022
Part 01#SriLanka #SLnews pic.twitter.com/2nneFtIRvB
