மூங்கிலாறு பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு(படங்கள்)
தமிழ் மக்களுக்கான உரிமை போருக்காக தங்களது பிள்ளைகளை உவந்தளித்த மாவீரர்களது பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு தமிழர் தாயகமெங்கும் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களிலும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.
அந்த வகையில் மூங்கிலாறு பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மூங்கிலாறு,வள்ளுவர் புரம், தேராவில், இளங்கோபுரம், மாணிக்கபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாவீரர்களுடைய பெற்றோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு ஒன்று நேற்று (25) மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
பெற்றோர்களுக்கான மதிப்பளிப்பு
மூங்கிலாறு சிவன் ஆலயத்திற்கு முன்பாக இருந்து மாவீரர்களது பெற்றோர்கள் மங்கள வாத்திய இசையோடு விழா மண்டபம் வரை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் இடம் பெற்றது.
தொடர்ந்து பெற்றோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
நிகழ்வில் சுமார் 200 க்கு மேற்ப்பட்ட மாவீரர்களது பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |