ஜே.கே.பாயின் தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்ட புகைப்படங்கள்! அம்பலமான மொரீஷியஸ் கடவுச்சீட்டு பின்னணி
இலங்கையில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட ஜே.கே. பாய் குறித்து வெளியாகும் விசாரணை அறிக்கைகளில் மேலும் பா தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக பாதாள உலக குழுக்களுக்கு மோசடியான முறையில் மொரீஷியஸ் கடவுச்சீட்டுகளை தயாரித்துக்கொடுக்கும் பின்னணியும் அவரது விசாரணைகளில் வெளிவந்துள்ளது.
இவ்வாறு மோசடியாக தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளில் பல புகைப்படங்கள் அவரது கையடக்க தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மொரீஷியஸ் கடவுச்சீட்டு
கொழும்பு குற்றப்பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜே.கே. பாயிடம் சர்வதேச ஆட்கடத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேற்கண்ட விடயங்கள் அம்பலமாகியுள்ளன.

இவ்வாறு மொரீஷியஸ் கடவுச்சீட்டு துருக்கியில் உள்ள ஒரு கடத்தல்காரரால் தயாரிக்கப்படுகின்றன என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த சட்டவிரோத கடவுச்சீட்டு தயாரிப்புக்கு ஒரு மில்லியன் மற்றும் அதற்கு மேல் அறிவிடப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை குற்றவாளிகளுக்கு மேலதிகமாக, இந்திய குற்றவாளிகளுக்கும் மொரீஷியஸ் கடவுச்சீட்டுகள் தயாரிக்க ஏற்பாடு செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மனித கடத்தல்காரர்களுடன் தொடர்பு
ஜே.கே. பாய் என்ற இந்த ஆட்கடத்தல்காரருக்கு தாய்லாந்து, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, நேபாளம், துபாய், மொரீஷியஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த மனித கடத்தல்காரர்களுடன் தொடர்பு உள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இன்டர்போல் மற்றும் இராஜதந்திர வழிகள் மூலம் தொடர்புடைய நாடுகளுக்குத் தெரிவிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |