அனைத்து இலங்கையரையும் போராட்டத்திற்கு அழைக்கும் கிரிக்கெட் பிரபலம்(photo)
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரரும் போட்டி நடுவருமான ரொஷான் மஹானாம, அனைத்து இலங்கையர்களும் முன் வந்து போராட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இனம், மதம், அரசியல் பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் உண்மையான தேசபக்தர் என்ற வகையில், உங்களுக்குத் தீங்கு விளைவிக்காமல், நாட்டின் எந்தவொரு சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்காமல், மிகவும் அமைதியான முறையில் உங்கள் ஏமாற்றத்தை தெரிவிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவத்துள்ளார்.
Since I have no respect for most of the leaders of our country, I’m of the opinion that we have to come together to hold our leaders accountable for their actions. I request every citizen irrespective of race, religion or political background to come forward to join the protests. pic.twitter.com/JTPp2zHyz6
— Roshan Mahanama (@Rosh_Maha) April 7, 2022
