பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Ministry of Education Anura Kumara Dissanayaka Sri Lanka Fuel Crisis School Holiday
By Sathangani Mar 17, 2026 04:06 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்ததன் பின்னணியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

தற்போது எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், எரிசக்தி முகாமைத்துவத்தைப் பேணி நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!

ஜனாதிபதி தெரிவிப்பு 

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு | Every Wednesday Is A Holiday For Schools Moe

அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், தற்போதைய சூழ்நிலையில் அரச சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, நிலவும் எரிபொருள் விநியோக சிக்கல்களை எதிர்கொள்வதற்காக, இன்று (17) முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி : அரச ஊழியர்களின் வேலை நாள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

எரிபொருள் நெருக்கடி : அரச ஊழியர்களின் வேலை நாள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

 4 பிரதான குழுக்கள் நியமனம்

இந்த விடுமுறை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறைக்கும் பொருந்தும் எனவும், சுகாதாரம், துறைமுகம், நீர் மற்றும் சுங்கம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரபாத் சந்திரகீர்த்தி சுட்டிக்காட்டினார்.

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு | Every Wednesday Is A Holiday For Schools Moe

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலையை ஆராய்ந்து எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைச்சரவையினால் 4 பிரதான குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அரிசி விலையில் மாற்றமில்லை... வெளியான அறிவிப்பு

அரிசி விலையில் மாற்றமில்லை... வெளியான அறிவிப்பு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026