வருடாந்தம் பாடசாலையைவிட்டு இடைவிலகும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் -அதிர்ச்சி தகவல்
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30,000 மாணவர்கள் 10ம் வகுப்பிற்கு முன்பே பாடசாலையை விட்டு வெளியேறுகிறார்கள் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க.
அண்மையில் மாத்தறை மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இடையிலான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்வித் துறையின் வளர்ச்சிக்கு முன்னுரிமை
நாட்டின் மிகப் பெரிய வளம் மனித வளம் என்பதால், அதன் உச்சக்கட்ட பலனைப் பெறும் வகையில் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கிடையில் பாரிய முரண்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளதால் பாடசாலை முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும்.
10ம் வகுப்பிற்கு முன்பே இடைவிலகும் 30,000 மாணவர்கள்
மேலும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30,000 மாணவர்கள் 10ம் வகுப்பிற்கு முன்பே பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள் என்றும் அதனால் இடைநிலைக் கல்வியை கைவிடாத கொள்கை நாட்டுக்கு தேவை என்றும் அவர் விளக்கினார்.