பாகிஸ்தான் உளவு அமைப்பின் முன்னாள் தலைவரை கைது செய்த ராணுவம்
பாகிஸ்தான் (Pakistan) உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI - Inter-Services Intelligence) யின் முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீதுவை அந் நாட்டு இராணுவம் கைது செய்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஃபைஸ் ஹமீத் (Faiz Hameed), ஒருகாலத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு (Imran Khan) மிகவும் நெருக்கமானவராக இருந்துள்ளார்.
இராணுவ நீதிமன்றம்
இந்நிலையில், முறைகேடு புகார் தொடர்பாக ஃபைஸ் ஹமீதை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் இராணுவம், அவர் மீது இராணுவ நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளது.
ஓய்வுக்குப் பின் பாகிஸ்தான் இராணுவ சட்டத்தை மீறும் வகையில் ஃபைஸ் ஹமீது பல செயல்களில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை தொடங்கிய நிலையில் முன்னாள் உளவுத்துறை தலைவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் இவர் கைது செய்யப்பட்டமைக்கான குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை விளக்கம் தரப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |