இல்லாமல் ஆக்கப்பட்ட முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் : டக்ளஸ் மீது வலுக்கும் குற்றச்சாட்டுக்கள்
சம்பளம் கேட்ட பிரச்சினையினால் ஈ.பி.டி.பி கட்சியின் (EPDP) முன்னாள் உறுப்பினர்கள் சிலரை டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) இல்லாமல் ஆக்கியுள்ளார் என கட்சியின் முன்னாள் உறுப்பினரான சதானந்தா என்று அழைக்கப்படும் சுப்பையா பொன்னையா தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (11) நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மகிந்தவின் (Mahinda) காலத்தில் ஒரு கோடிக்கு மேல் சம்பளம் எடுத்தார்கள். ஆனால் எங்களுக்கு பத்தாயிரம் அல்லது பதினையாயிரம் ரூபா சம்பளம் வழங்கினார்கள்.
கட்சியில் இருந்து விலகும் வரை மாதாந்தம் 3000 ரூபா சேமிப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனால் அவ்வாறு எதுவுமே சேமிக்கப்படவில்லை.
19 வருடங்களாக கட்சியிலிருந்தேன் ஆனால் 17 ஆயிரம் ரூபாவிற்கு மேல் மாதாந்தம் சம்பளம் வாங்கவில்லை. சம்பளம் கேட்ட சிலரை டக்ளஸ் இல்லாமல் ஆக்கியுள்ளார்.
இவ்வளவு காலமும் டக்ளஸ் தேவானந்தா பக்கம் அரசாங்கம் இருந்ததால் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இவர்களுடன் சேர்ந்திருந்த நூற்றுக்கணக்கானோர் இன்று வீதிகளில் நிற்கின்றனர்.
2015,2016 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு வந்து காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கினேன். ஆனால் டக்ளஸ் தேவானந்தவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சில பிரச்சினைகளை இங்கே தெரிவிக்க முடியாது. ஆனால் நீதிமன்றத்தில் விசாரணை என்று வந்தால் அந்த இடத்தில் சொல்வதற்கு தயாராக இருக்கின்றேன்.“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |