போராளிகள் நலன்புரி சங்க தலைவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது
Facebook
Sri Lankan Tamils
Colombo
Vavuniya
By Sathangani
வவுனியாவில் வசிக்கும் முன்னாள் போராளியும், போராளிகள் நலன்புரி சங்க தலைவருமான செ.அரவிந்தன் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் முகப்புத்தக பதிவு தொடர்பில் கடந்த 12ஆம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இருந்த போதிலும் அவர் விசாரணைக்கு செல்லாத நிலையில் நேற்றைய தினம் (26) மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
இந்த நிலையில் அவர் கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு சென்ற சமயமே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று அவரை கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 14 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்