சி.டி. விக்ரமரத்னவிடம் ஏராளமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தகவல்கள்! அமைச்சர் வெளிப்படை
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் ஏராளமான தகவல்கள் இருந்திருக்கலாம் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், காவல்துறை தற்போது மரணம் குறித்து விரிவான விசாரணையை நடத்தி வருவதாகக் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பிறகு .சி.டி. விக்ரமரத்ன காவல்துறை மா அதிபராக பணியாற்றியதால், ஒரு உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரி என்ற முறையில், அந்தச் சம்பவம் குறித்து அவரிடம் ஏராளமான தகவல்கள் இருந்திருக்கலாம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாட்சியம் வழங்கிய விக்ரமரத்ன
அத்தோடு, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்பும் அவர் முன்னிலையாகி சாட்சியம் அளித்திருந்ததை அமைச்சர் அதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.

இந்நிலையில், காவல்துறை விசாரணைகளிலிருந்து குறிப்பிட்ட தகவல்கள் இன்னும் வெளிவராததால், விழிப்புடன் இருப்பது அவசியம் என்று அமைச்சர் அனுர கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளார்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்