காவல்துறை அதிகாரி வீட்டில் இருந்து பயங்கர ஆயுதங்கள் மீட்பு!
கண்டியில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) ஒருவரின் வீட்டில் இருந்து மூன்று கையெறி குண்டுகள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கண்டி, நத்தரம்பொத்தவில் அமைந்துள்ள குறித்த வீட்டில், சம்பந்தப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளரின் மனைவி வழங்கிய ரகசிய தகவலின் அடிப்படையில் கண்டி காவல்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
விசாரணைகளின்படி, யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் இந்த அதிகாரி, தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இந்த வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.எனினும், தம்பதியினருக்கு இடையே நீண்ட காலமாக குடும்ப தகராறு நிலவி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்த ஆயுதங்கள் உதவி காவல் கண்காணிப்பாளரின் ஆடை அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக பல்லேகெலே காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இது குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக சந்தேநபரான காவல்துறை அதிகாரி கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பல்லேகெலே காவல்துறையினரும், கண்டி மாவட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்