ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மனு மீளப்பெறப்பட்டது
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் (Johnston Fernando) மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனு இன்று (05) மீளப் பெறப்பட்டுள்ளது.
கொழும்பு (Colombo) ஹில்டன் ஹோட்டல் வாகன தரிப்பிடத்தில் சட்டவிரோதமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட BMW கார் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
மொஹமட் லஃபார் தாஹிர் (Mohammad Lafar Thahir) மற்றும் பி. குமரன் ரத்னம் (P. Kumaran Ratnam) ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றில் கோரிக்கை
இந்த நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரருக்கு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதால், இந்த மனுவைத் தொடர்ந்தும் பேண வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, மனுவை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, மனுவை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |