சர்ச்சைக்குரிய சொகுசு வாகனம் மீட்பு : கைது செய்யப்பட்ட மற்றுமொருவருக்கு பிணை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் (Johnston Fernando) சர்ச்சைக்குரிய பி.எம்.டபிள்யூ ரக சொகுசு வாகனம் தொடர்பில் கைதான மேலும் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் நேற்றைய தினம் (04) கொழும்பு (Colombo) கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
பிணையில் விடுதலை
பதிவு செய்யப்படாத இந்த சொகுசு காரை குறித்த நபர் முன்னாள் அமைச்சருக்கு எடுத்துச் சென்றதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவன ஊழியர்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |